தமிழ்நாடு பொதுநிலையினர் பணிக்குழுவின் பொதுக்குழுக் கூட்டம் செப்டம்பர் 12 ஆம் தேதி திருச்சி பிராட்டியூர், பொதுநிலையினர் உருவாக்க மையத்தில், பணிக்குழுத் தலைவர் மேதகு ஆயர் நீதிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பணிக்குழுவின் செயலர் அருள்பணி. சு. லூர்துசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கடந்த பொதுக்குழு கூட்ட அறிக்கையை இணைச்செயலர் திரு. சேவியர் இன்னாசிமுத்து அவர்கள் சமர்ப்பித்தார். பணிக்குழு செயலர் அருள்பணி. சு. லூர்துசாமி 2020-2021 ஆண்டறிக்கையை சமர்ப்பித்து, எதிர்காலத் திட்டங்களைப் பற்றி நன்கு விளக்கினார். மறைமாவட்ட செயலர்கள் மறைமாவட்ட அறிக்கைகளை அளித்தனர். கொரோனா காலத்திலும் மறைமாவட்ட பணிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்து கூறினார்.
பணிக்குழுத் தலைவர் மேதகு ஆயர் நீதிநாதன் அவர்கள் தமது உரையில் கொரோனா தொற்று நோய் பரவி வந்த சூழலில் வீட்டிலேயே முடங்காமல் பங்கிலும், மறைமாவட்டத்திலும், திருஅவையிலும், சமூகத்திலும், அரசியலிலும் ஆர்வமுடன் பங்கேற்று மக்களை வழிநடத்தியமைக்கு அனைவரையும் பாராட்டினார். தொடர்ந்து தடைகளை தகர்த்து, பணியாற்றி இறையாட்சியை வளர்க்க வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.
கருத்தாளர் சான்றிதழ் தொடர் பயிற்சி, மறைமாவட்டக் கருத்தரங்கு, மண்டலக் கருத்தரங்கு பொதுநிலைத் திருப்பணியாளர் மறுமலர்ச்சி தியானம், மாநில மாநாடு - 2022, இணைய வழி கருத்தரங்குகள் (Zoom Meeting), Whatsapp, . (கட்சேவி), பொதுநிலையினர் கையேடு வெளியீடு என 2021-22 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஞாயிறு திருப்பலியுடன் பொதுக்குழு நிறைவுபெற்றது.