SPECIAL NEWS FROM EDITOR மறைமாவட்ட ஊடகப் பணிக்குழுச் செயலர்களோடு ஒரு கலந்தாய்வு
Friday, 15 Mar 2019 05:06 am
Namvazhvu
மறைமாவட்ட ஊடகப் பணிக்குழுச் செயலர்களோடு ஒரு கலந்தாய்வு
தமிழக ஆயர் பேரவையின் அரவணைப்பில் வெளிவரும் தமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார இதழான நம் வாழ்வு அதன் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒருங்கிணைத்த தமிழக மறைமாவட்டங்களின் ஊடகப் பணிக்குழுச் செயலர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்தை பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி புதன்கிழமை சென்னை - மயிலையில் நடத்தியது. சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் ஊடகப் பணிக்குழுச் செயலர் அருள்பணி பெலிக்ஸ் பிலிப் தூய ஆவியின் துணையை வேண்டி தொடக்கச் செபத்தைச் செபித்தார். தமிழக ஆயர் பேரவையின் நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கத் தலைவரும் சென்னை மயிலை பேராயருமான மேதகு ஜார்ஜ் அந்தோனிசாமி இக்கூட்டத்திற்கு வந்திருந்து அனைத்து செயலர்களையும் வரவேற்று, இது மாதிரியான முயற்சி நம் வாழ்வு வரலாற்றில் ஒரு மைல்கல் என்று நன்றிப் பாராட்டினார். அதனைத் தொடர்ந்து முதன்மை ஆசிரியர் குடந்தை ஞானி அனைவரையும் வரவேற்று, இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தின் இன்றியமையாமையைப் பற்றியும் அதன் தேவை யைப் பற்றியும் எடுத்துரைத்தார். திண்டுக்கல் மறை
மாவட்டத்தின் ஊடகப்பணிக்குழுச் செயலர் அருள் முனைவர் பிலிப் சுதாகர், தஞ்சை மறைமாவட்டத்தின் ஊடகப்பணிக்குழுச் செயலர் அருள்பணி. ஜார்ஜ், தருமபுரி மறைமாவட்டத்தின் ஊடகப்பணிக்குழுச் செயலர் அருள்பணி. மரிய ஜோசப். சென்னை - மயிலை உயர் மறைமாவட்டத்தின் ஊடகப் பணிக்குழுச் செயலர் அருள்பணியாளர் பெலிக்ஸ் பிலிப், செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் ஊடகப்பணிக்குழுச் செயலர் அருள்பணி. லாரன்ஸ், பாண்டிச்சேரி கடலூர் உயர் மறைமாவட்டத்தின் அருள்பணி. பிலோமின்தாஸ் ஆகிய ஆறு செயலர்கள் பங்கேற்றனர். ஏனைய 11 மறைமாவட்டச் செயலர்கள் வழக்கம்போல் வரவில்லை.
தலைதூக்கும் பெரும்பான்மைவாதம், சிறு பான்மையினராக நம்மை அச்சுறுத்துகிற இந்த வேளையில் ஊடகப் பணியில் ஈடுபட்டுள்ள குருக்களிடையே புரிந்துணர்வும் ஒருங்கிணைப்பும் வேண்டும் என்று தமிழக ஆயர் பேரவை கேட்டுக்கொண்டதன் பேரில் இந்தக் கூட்டம் பேராயரின் தலைமையில் நடைபெற்றது. நம் வாழ்வு வரலாற்றை விளக்கிய பின்பு இன்றைய அச்சு ஊடகப் பணியின் அவசியத்தையும் உலகில் உள்ள தமிழ்ப் பேசும் கிறிஸ்தவர்களுக்கென்று உள்ள ஒரே வார இதழ் நம் வாழ்வை எந்த விதத்தில் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச்செல்ல முடியும் என்று கலந்தாலோசனை செய்யப்பெற்றது.
அதில் தொடக்கத்திலேயே அருள்பணி.ஜார்ஜ் அவர்கள், ஊடகப் பணிக்குழுச் செயலர்களாகிய நாங்கள் வெறுமனே கலந்தாலோசனை வழங்க மட்டும் அழைக்கப்பட்டிருக்கிறோமா? அல்லது மாதா தொலைக்காட்சிக்கு மண்டலச் செயலர்களாக இருந்து பங்களிப்பதைப்போல நம் வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து பங்களிக்கிறப் போகிறோமா? என்ற முத்தாய்ப்பான கேள்வியைக் கேட்டு விவாதத்தைத் தொடங்கிவைத்தார். ஊடகப் பணி என்கிறபோது காட்சி ஊடகமான மாதா தொலைக்காட்சியின் பணி என்பது ஆன்மிக அடிப்படையிலானது. 44 ஆண்டுகள்வரலாறு உடைய அச்சு ஊடகமான நம்வாழ்வோ, ஆன்மிகத்தையும் அரசியலையும் அடிப்படையாகக் கொண்டு, திருச்சபைச் செய்திகள், அரசியல் கட்டுரைகள், சமூகக் கட்டுரைகள், ஆன்மிகக் கட்டுரைகள், வேலைவாய்ப்புச் செய்திகள், வழிபாட்டுச் சிந்தனைகள் என்று பல தளங்களைக் கொண்டு செயல்படுகிறது என்று முதன்மை ஆசிரியர் விளக்கினார். இந்தக் கூட்டம் என்பது ஒரு தொடக்கம்தான். தொடர்ந்து ஊடகப் பணிக்குழுச் செயலர்களுக்கான கூட்டம் தொடர்ந்து ஆண்டுக்கு இருமுறை நடைபெற வேண்டும். சென்னையில் மட்டுமல்ல: சென்னையைத் தவிர்த்து திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களிலும் கூட்டப்பட வேண்டும் என்று பேராயர் தன் விருப்பத்தை வெளியிட்டார். உங்கள் பணி இன்றோடு முடியவில்லை; மாறாக இன்றிலிருந்து தொடங்குகிறது. என்றும் ஊக்கப்படுத்தினார். நம் வாழ்வு வெளியிட்டுச் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தின்போது ஓர் அமர்வை நடத்தலாம் என்று பரிந்துரைத்தனர்.
1. ஆசிரியர் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்ற அவா வெளியிடப்பட்டது. ஒரு வழிப்பாதையாக அல்லாமல் பல்வேறு கருத்தாளர்கள் கொண்ட ஆசிரியர் குழு ஏற்படுத்த வேண்டும். இதுவரை நம் வாழ்வில் ஆசிரியர் குழு இல்லை. மறைமாவட்ட இதழ்கள், திருத்தல இதழ்கள், துறவறச் சபைகளின் இதழ்கள், பங்குசார் இதழ்கள் ஆகியவை குறைக்கப்பட வேண்டும்.
2. நம் வாழ்வு எழுத்தாளர்களுக்கு உரிய சன்மானம் கொடுத்தால் நல்லது.
3. பிரபல எழுத்தாளர்களை அணுகி அவர்களை நம் வாழ்வில் எழுதவைக்க வேண்டும்.
4. நகரத்தை மட்டுமே மையப்படுத்தாமல்.. கிராமங்களில் வாழும் கிறிஸ்தவர்களையும் மையப்படுத்த வேண்டும். அவர்களை ஒருபோதும் புறந்தள்ளக் கூடாது.
5. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைய பேட்டிகள் வந்துள்ளன. உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்தல் பாராட்டுக்குரியது. தொடர்ந்து நம் வாழ்வின் சமூகப் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அது தொடர்ந்திட வேண்டும். நீங்கள் உதவுவதை செய்தியாக மாற்ற வேண்டும்.
6. நம் வாழ்வின் பொருளாதாரம் வலிமைப்படுத்தபட வேண்டும். தன் காலில் தானே நிற்க அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். நம் வாழ்வின் தாள்களின் தரம் கூடுவதற்கு அதற்கான பொருளாதாரம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
7. நம் வாழ்வின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் வாசகர்களின் எண்ணிக்கையும் பெருக்கப்பட வேண்டும். தலத்திருச்சபையின் செய்திகள் அதிகமாக இடம்பெற வேண்டும். எழுத்தாளனைக் கொண்டாடும் களமாக நம் வாழ்வு மாற வேண்டும்.
8. உண்மையை உரக்கச் சொல்ல நம் வாழ்வு தனித்து நிற்க வேண்டும். பாலவாக்கம் முதியோர் இல்ல பிரச்சினையை வெளிப்படுத்திய நம் வாழ்வின் பணி பாரட்டுக்குரியது. இன்னும் ஆழமாகச் செயல்பட வேண்டும். மாற்றுச் சிந்தனைக்கான களமாக நம் வாழ்வு விளங்க வேண்டும்.
9. மக்களின் தேவையை உணர்ந்து அதற்கான தலைமைத்
துவப் பயிற்சியை நம் வாழ்வு ஏற்படுத்த வேண்டும். எழுத்தாளர் பயிற்சிப் பாசறை நடத்த வேண்டும்.
10. அந்தந்த பகுதிகளில் செய்திகளைச் சேகரிக்கவும் நேர்காணல்களை மேற்கொள்ளவும் அந்தந்த மண்டலச் செயலாளர்கள் ஈடுபடுத்தப் படலாம்.
11. இடம் பெறும் செய்திகள் இரத்தினச் சுருக்கமாகவும் படிக்கத் தூண்டுபவனவாகவும் இருக்கவேண்டும். ஒரு பக்கக் கட்டுரைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட வேண்டும். கல்விச் சுரங்கம் மிகவும் நன்றாக வெளிவருகிறது.
12. பயிற்சிப்பெற்று பணியாற்றி ஓய்வுப்பெற்ற வேதியர்களைப் பயன்படுத்தலாம். அவர்கள் ஒரு சந்தாவிற்கு ரூ.75/- ஐ எடுத்துகொண்டு மிதியை செலுத்தச் சொல்லலாம்.
13. நீங்கள் பணி நிமித்தம் செல்லும் இடங்களில் நம் வாழ்வை அறிமுகப்படுத்த வேண்டும். அதைப்பற்றி மக்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.
14. ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் நீங்கள் அறிந்த நல்ல பொதுநிலையினரை பொறுப்பாளராக பரிந்துரைக்கலாம். தற்போதுள்ள பொறுப்பாளர்களில் செயல்படுகின்ற பொறுப்பாளர்களைத் தவிர மற்ற மறைமாவட்டங்களுக்கு பரிந்துரைக்க வேண்டுகி
றோம். நம் வாழ்வுடன் கல்விச் சுரங்கம் என்ற
மாத இதழையும் சேர்த்து பொறுப்பெடுத்தால் மாதந்தோறும் நல்ல ஊதியத்தை கமிஷனாகப் பெற முடியும்.
15. நல்ல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்த வேண்டுகிறோம். மறைமாவட்டச் செய்திகளை அனுப்ப வேண்டுகிறோம். மறைமாவட்டச் செயலர்களுக்கு நம் வாழ்வு பற்றிய துண்டறிக்கையை தரவேண்டும். அதை அவர்கள் மறை மாவட்டந்தோறும் விநியோகிக்க வேண்டும்.
16. ஆன்லைன் வழியாக நேரடியாக சந்தாவைச் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது மாதா தொலைக்காட்சி போல ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் ஒரு சந்தா இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். மாதா தொலைக்காட்சியில் உள்ளதுபோல ஒரு மறைமாவட்டத்தில் உள்ள பங்கு
களில் மூன்றில் ஒரு பங்கை எடுத்து அவற்றை நூறால் பெருக்கி அத்தனை சந்தாதாரர்களை கட்டாயம் சேர்க்க வேண்டும். 100 பங்குகளில் 33 பங்குகளை 100 ஆல் பெருக்கி 3300 சந்தாதாரர்கள் மறைமாவட்டம் தரவேண்டும். இப்படிச் செய்தால்தான் நம் வாழ்வும் வளரும். இது குறைந்தப்பட்ச முயற்சி. இதனை ஒவ்வொரு மறைமாவட்டம் தங்களிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான குடும்ப குறைந்த பட்சம்
2000 குடும்பங்களை சந்தாதரர்களாகக் கொடுத் தாலே நம் வாழ்வின் வளர்ச்சி பெருமளவில் உயரும்.
17. மறைமாவட்ட ஆயர்கள் உதாரணமாக தஞ்சை மறை மாவட்டத்தைப்போல பூசைக் கருத்துகள் தந்து தங்கள் மறைமாவட்ட குருக்களைச் சந்தாதாரர்களாக்க வேண்டும்.
இறுதியாக பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள் அனைத்துச் செயலர்களையும் ஊக்கப் படுத்துகிறவிதமாக எழுச்சியுரை ஆற்றினார். எழுதும்
படி அவர்களைத் தூண்டினார். புதிய இளம் எழுத்தாளர்களை அடையாளங்க கண்டு நம்வாழ்வுக்கு அறிமுகப்படுத்தும்படியும் வேண்டினார். மறைமாவட்ட ஊடகப் பணிக்குழுச் செயலர்களை எந்தவிதத்தில் நம் வாழ்வு குடும்பத்தின் உறுப்பினர்களாக மாற்ற முடியும் என்று தமிழக ஆயர் பேரவையோடு கலந்தாலோசித்துச் சொல்வதாக தலைவர் பேராயர் எடுத்துரைத்தார்.
வந்திருந்த அனைத்துச் செயலர்களுடைய ஒருமித்த குரலும் நம் வாழ்வுக்கு எங்களுடைய பங்களிப்பு அவசியம் என்பதை இதுவரை எங்களுக்கு யாரும் சொல்லவில்லை. எனவே இந்த முயற்சியைப் பாராட்டுகிறோம் என்று மகிழ்ந்தனர். எங்களுக்கு இன்னோர் அடையாளம் கொடுத்த இந்த கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு மிக்க நன்றி என்று தர்மபுரி மறைமாவட்ட ஊடகப் பணிக்குழுச் செயலர் அருள்பணி. மரிய ஜோசப் உள்ளம் நெகிழ்ந்தார். இறுதியாக. இந்த நிகழ்வின் முத்தாய்ப்பாக றறற.யேஅஎயணாஎர.in என்ற இணையதளத்தை எம் வெளியீட்டுச் சங்கத் தலைவர் அறிமுகப்படுத்தித் தொடங்கி வைத்தார். இறுதியில் துணை ஆசிரியர் அருள்பணி.குருசு கார்மல் நன்றி நவின்றார். (புகைப்பட உதவி சகோ. ஜிஜோ).