Namvazhvu
Indian Church News பெரிய வியாழனை உதாசீனப்படுத்திய உச்ச நீதிமன்றம்
Saturday, 06 Apr 2019 10:26 am
Namvazhvu

Namvazhvu

பெரிய வியாழனை உதாசீனப்படுத்திய உச்ச நீதிமன்றம்

பெரிய வியாழக்கிழமையான ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள நிலையில் பாராளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக ஆயர் பேரவை மற்றும் கிறித்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு, வாக்குப் பதிவு நாளை ஒத்திவைக்க முடியாது என்று மறுத்துவிட்டது. இந்நிலையில் இதனை எதிர்த்து கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி. எஸ்.ஏ.போடே. எஸ். அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விரைந்து விசாரிக்க மறுத்துவிட்டது.  கிறிஸ்தவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம் ‘ நீங்கள் புனித நாளில் வாக்களிக்க முடியாதா? வாக்களிக்க எவ்வளவு நேரம் ஆகிவிடப் போகிறது? எப்படி செபிப்பது?-எப்படி வாக்களிப்பது என்று நாங்கள் அறிவுரை கூற விரும்பவில்லை. என்று விசாரணையின்போது குறிப்பிட்டுள்ளனர்.  இந்த வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று மறுத்துள்ளது.