Namvazhvu
குடந்தை ஞானி சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனையிலும் முத்திரை பதித்த நம் வாழ்வு
Wednesday, 23 Mar 2022 07:19 am
Namvazhvu

Namvazhvu

சென்னையில் நடைபெற்ற 45 வது புத்தகக் கண்காட்சியில் முதல் முறையாக நம் வாழ்வு வெளியீடு, சென்னை சலேசிய அரும்பு பதிப்பகத்தோடு இணைந்து, 20 X18 அளவில் ஸ்டால் எண் 395-396 எண்ணில் கிறிஸ்தவர்களுக்கான புத்தகத் தேடலுக்கான ஒரு களம் அமைக்கப்படும் என்ற நோக்கில் 550க்கும் மேற்பட்ட புத்தகத் தலைப்புகளில், அரசியல், ஆன்மீகம், இலக்கியம், இறையியல் செபம் என்று வகைப்படுத்தி 4000 நூல்களை விற்பனைக்கு சந்தைப்படுத்தியது. நம் வாழ்வு வெளியீடு, அரும்பு பதிப்பகம், நாஞ்சில் பதிப்பகம், பூவேந்தன் பதிப்பகம், தேடல் வெளியீடு, அருள்வாக்கு மன்றம், தமிழ் இலக்கியக் கழகம், பவுலின், ஜெபமாலினி, தியாலஜிக்கல் பப்ளிக்கேசன் ஆப் இந்தியா, TNBCLC ஆகிய பதிப்பகங்களிடமிருந்து பெறப்பட்ட நூல்கள் அனைத்தும் 10 முதல் 30 சதவீத கழிவுத் தொகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. முதல் முறையாக முழுக்க முழுக்க கிறிஸ்தவ நூல்களை மட்டுமே கட்டமைக்கப்பட்ட நம் விற்பனை நிலையத்தில், கிறிஸ்தவ நூல்களுக்கு முகவரியும் கிறிஸ்தவ எழுத்தாளர்களுக்கு அங்கீகாரமும் கிடைத்தது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே கிறிஸ்தவ நூல்கள் விற்பனையாயின. சென்னை - மயிலை மறைமாவட்ட நற்செய்தி அறிவிப்பு பணிக்குழுவின் சார்பில் அருள்பணி. தாமஸ் இளங்கோ அவர்களின் உதவியின் பேரில் 50க்கும் மேற்பட்ட விலையில்லா திருவிவிலியம் விரும்பியவர்களுக்கு கொடுக்கப்பட்டது. பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதிவரை நடைபெற்ற இப்புத்தகக் கண்காட்சிக்கு உறுதுணையாக இருந்த துணையாசிரியர் அருள்திரு. ஜான் பால் அவர்களுக்கும், களப்பணியாற்றிய நம் வாழ்வு பணியாளர்கள் திரு. அருள்தாஸ் மற்றும் திரு. சாலமோன் அவர்களுக்கும், அரும்பு பதிப்பகப் பணியாளர் திருமதி. சில்வியா அவர்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக இந்த முன்னெடுப்புக்கு மிகுந்த ஊக்கம் கொடுத்து, செயல்வடிவம் கொடுத்த அரும்பு பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் அருள்திரு. அமிர்தராஜ் . அவர்களுக்கும் சென்னை சலேசிய மாநிலத் தலைமைக்கும் மனமார்ந்த நன்றி.

- குடந்தை ஞானி, ஆசிரியர்