Namvazhvu
மே 29     புனித சிரில்
Friday, 27 May 2022 07:47 am
Namvazhvu

Namvazhvu

புனித சிரில் இவரது தாய் கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தார். தந்தை கிறிஸ்துவை மறுதலித்தார். தாயின் வழியில் இறையன்பிலும் பிறரன்பிலும் பக்தியிலும் இறைஞானத்திலும் வளர்ந்தார். தந்தை தன் மகன் கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாய் இருப்பதால் கோபம் கொண்டார். கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தி, வீட்டிலிருந்து வெளியேற்றினார். சிரில் கிறிஸ்தவர் என்பதால் செசாரியாவின் ஆளுநன் தன் வீரர்களை அனுப்பி, சிரிலை அழைத்துவர கூறினார். வீரர்கள் சிரிலிடம் கிறிஸ்தவர் என்பதற்காக எதிர்கொள்ளப்படும் துன்பங்களை விவரித்து ஆளுநரிடம் கொண்டு சென்றனர். ஆளுநன் கிறிஸ்துவை மறுதலித்து உரோமை தெய்வத்தை ஏற்கக்  கூறினான். “நான் கிறிஸ்துவை நம்புவதால் தண்டனை அனுபவிப்பதில் எனக்கு மகிழ்ச்சியேஎன்றார். எத்துன்பத்திற்கும் பயப்படாமல் கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாய் இருந்த சிரில் 251 இல் வாளால் வெட்டுண்டு இறந்தார்.