தொன் போஸ்கோ வழிகாட்டி மையம் தனது 25 வது ஆண்டு வெள்ளி விழாவை சென்னை - சாந்தோமில் உள்ள புகழ்பெற்ற புனித பீட்ஸ் மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் மே மாதம் 21 ஆம் தேதி ‘இளையோரோடு இளையோருக்காய்’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக கொண்டாடியது.
வெள்ளி விழாவுக்கு திருமதி இன்னொசன்ட் திவ்யா ஐஏஎஸ் அவர்கள் (MD, TNSDC) அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் கரிஷ்மா சொலியூசன்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி திரு. ஜோனா ஸ்டீபன், சென்னை சலேசிய மாநில தலைவர் Fr. K.M. ஜோஸ் ச.ச மற்றும் முன்னாள் வழிகாட்டி இயக்குனர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
வெள்ளி விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், பங்குதாரர்கள், கல்வி மற்றும் தொழில் துறை நிறுவனங்களின் தலைவர்கள், வழிகாட்டி முன்னாள் பணியாளர்கள், நண்பர்கள் அனைவரையும் தொன் போஸ்கோ வழிகாட்டி இயக்குனர் அருள்பணி. ஆன்ரூஸ் ஸ்டீபன் ராஜ் ச.ச வரவேற்று, சிறப்பு செய்தார். திருமதி இன்னொசன்ட் திவ்யா ஐஏஎஸ் அவர்கள் தலைமை உரையாற்றி வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு மகிழ்ந்தார். அதன் முதல் பிரதியை சென்னை சலேசிய மாநில தலைவர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களும் பெற்றுக்கொண்டனர்.
கரிஷ்மா சொலியூசன்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி திரு. ஜோனா ஸ்டீபன்,அவர்கள் கணினி வழி கற்றல் மேலாண்மை அமைப்பு (LMS) பயன்பாட்டை துவக்கி வைக்க, சென்னை சலேசிய மாநில தலைவர் ஆசியுரை வழங்கினார். இளைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவுக்கு வழிகாட்டியின் பல பயிற்சிகள், வேலை வாய்ப்புகள் மூலம் பயனடைந்த 700க்கும் மேற்பட்ட இளையோர் பங்கேற்றனர். இறுதியில் அருள்பணி. ஜேம்ஸ் சாமிநாதன் ச.ச அனைவருக்கும் நன்றி கூறினார். தொன் போஸ்கோ பாடலுடன் வெள்ளி விழா கொண்டாட்டம் நிறைவு பெற்றது. வழிகாட்டியின் பணியாளர்கள் நிகழ்ச்சிகளை தயாரித்து தொகுத்து வழங்கினர். இதுவரை சென்னை தொன் போஸ்கோ வழிகாட்டி மையம் 74 932 இளைஞர் இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்வில் முன்னேற வழி காட்டியுள்ளது.மேலும்விவரங்களுக்கு www.donboscovazhikaatti.com