Namvazhvu
ஜூன் 22  புனித தாமஸ் மூர்
Wednesday, 22 Jun 2022 12:28 pm
Namvazhvu

Namvazhvu

புனித தாமஸ் மூர் இங்கிலாந்தில் 1477 ஆம் ஆண்டு, பிப்ரவரி 7 ஆம் நாள் பிறந்தார். கான்றர்பரி ஆயர் கண்காணிப்பில் அறிவிலும், பக்தியிலும், ஞானத்திலும், வாதாடும் திறமையிலும் வளர்ந்தார். இயேசுவை ஆராதித்து, ஒப்புரவு செய்து, திருப்பலியில் பங்கேற்று நற்கருணை அருந்துவது வழக்கம். வழக்குரைஞர் பட்டம் பெற்று, பிரச்சனைகளை எளிதாக தீர்த்தார். 7 ஆம் ஹென்றி அரசரின் பாராளுமன்ற உறுப்பினரானார். திருமணம் செய்து குழந்தைகளுக்கு தந்தையானார். நீதிபதியாக உண்மைக்கு சான்று பகர்ந்து, நீதியை நிலைநாட்டி, ஏழைகளிடம் அன்பும், கரிசனையும் கொண்டார். மாணவர்களின் தோழனாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், பொருளாதாரத் துறைகளில் செயல்பட்டார். வணிகர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையை எளிதாக தீர்த்தார். பிரான்ஸ் நாட்டு அரச பிரதிநிதியாக பணி செய்து, 1535 ஆம் ஆண்டு, ஜூலை 6 ஆம் நாள் இறந்தார்.