Namvazhvu
ஜூன் 25  புனித வில்லியம்
Wednesday, 29 Jun 2022 06:12 am
Namvazhvu

Namvazhvu

மோன்ட்ரே விர்ஜினே நகர் புனித வில்லியம் இத்தாலியில் 1085 ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தைப் பருவத்தில் பெற்றோரை இழந்தார். தனது 15 ஆம் வயதில் உலக இன்பங்களை துறந்து, ஒறுத்தல்கள் செய்தார். கால்நடையாக புனித யாக்கோபின் திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொண்டார். இறை தூண்டுதலால் இத்தாலியில் இறைபணி செய்ய உந்துதல் பெற்றார். விர்ஜினே பகுதியில் குடிசை அமைத்து, தனிமையில் தன் ஆன்மீக வாழ்வை ஆரம்பித்தார். இறையனுபவம் மிகுந்த வில்லியம்மை மக்கள் சந்தித்து இறையாசீர் பெற்றனர். ஏழைகளின் நலன் கருதி நன்மைகள், புதுமைகள் செய்தார். பலரை தன்னுடன் இணைத்து துறவு மேற்கொண்டார். கடினமான தவ ஒறுத்தல்கள் வழியாக ஆன்மாக்கள் மீட்புபெற உழைத்தார். சிசிலியில் முதலாம் ரோஜரின் உதவியுடன் ஆண்கள், பெண்கள் என்று துறவு இல்லங்கள் நிறுவினார். 1142 இல் ஜூன் 25 ஆம் நாள் இறந்தார்.