அலெக்ஸாந்திரியா நகர் புனித சிரில் 376 ஆம் ஆண்டு, எகிப்தில் பிறந்தார். இறைபக்தியில் வளர்ந்து இறைஞானம் மிகுந்தவரானார். இறையியல் பயின்று குருவானார். இறைவனோடு இணைந்து திரு அவையை அன்பு செய்தார். தியோஃபிலஸ் 412 இல் இறந்தபோது, சிரில் மறைத்தந்தையானார். நெஸ்தோரியனிசம் தப்பறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். கிறிஸ்தவர்களை துன்பத் துயரங்களிலிருந்து விடுவித்தார். தன்மீது குற்றம் சுமத்தியவர்களை மன்னித்து, அன்பு செய்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும், பக்தியும் பற்றும் கொண்டார். “வெவ்வேறான மெழுகுத் துண்டுகள் இரண்டை எடுத்து ஒட்ட வைக்கும்போது ஒன்றாகி விடுகிறதன்றே? அவ்வாறே நற்கருணை விருந்தில் பங்கேற்கும் ஒருவர் கிறிஸ்துவுடன் ஒன்றாகிறார். கிறிஸ்து அவருடனும், அவர் கிறிஸ்துவுடனும் இணைந்து விடுகின்றார்” என்று கூறிய சிரில், 444 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் நாள் இறந்தார்.