Namvazhvu
விவசாயத்திற்கு ஒரு பத்மஸ்ரீ விருது விவசாயம் இந்திய நாட்டின் முதுகெலும்பு
Thursday, 07 Jul 2022 05:39 am
Namvazhvu

Namvazhvu

விவசாயம் இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றது. ஆனால் இந்நவீன காலத்தில் விவசாயமும், விவசாயிகளும் பல்வேறு காரணங்களால் நசுக்கப்பட்டு வருகிறார்கள். இத்தகைய தருணத்தில் மண்ணைப் பொன்னாக்கும் வித்தையில் வெற்றிகண்ட ஒரு விவசாயிக்கு இந்திய அரசு 2022க்கானபத்ம ஸ்ரீவிருதைக் கொடுத்து கவுரவித்திருப்பது நமக்கொரு நம்பிக்கையை தருகிறது. சுரங்க மனிதர்அதிசய மனிதர், அற்புத மனிதர் என பல்வேறு விதமான அடைமொழிகளுடன் அறியப்படும்அமை மகாலிங்க நாயக்என்ற விவசாயியே அவர். இவர், முறையான ஏட்டுக் கல்வியை பயிலாதவர். 1978 இல் மஹாபாலா பாட் என்ற நிலக்கிழார் மலைப்பகுதியிலிருந்த அவருக்கு சொந்தமான தரிசு நிலத்தை அமை மகாலிங்க நாயக்கிற்கு தானமாகக் கொடுத்துள்ளார்.

அது ஒரு தரிசு நிலம். தண்ணீர் இல்லாத அந்த நிலத்தில் விவசாயம் செய்வது சவாலான காரிய. ஏனவே பழங்கால வழக்கப்படி சுரங்கம் வெட்டி அதன் மூலம் தண்ணீரை நிலத்திற்கு கொண்டுவர அமை மகாலிங்க நாயக் திட்டமிட்டார். அதற்கான பணியைத் தொடங்கிய போது பலரும் கேலி செய்தனர். மேலும் சுரங்கம் வெட்டும் வேலையாட்களுக்கு கூலி தர வசதியில்லை. எனவே தன்னிடமிருந்த தன்னம்பிக்கையை மூலதனமாகப் போட்டு தனி ஒருவராக சுரங்கம் வெட்டத் தொடங்கினார். 4 ஆண்டுகள் முயற்சிக்குப்பின்தான் ஆறாவது சுரங்கம் தோண்டும்போது 315 அடியில் அவருக்கு நீர் கிடைத்துள்ளது. அதோடு தன் வீட்டு தேவைக்காக தனியே ஏழாவது சுரங்கம் ஒன்றும் அவர் வெட்டியுள்ளார். மழை நீர் சேகரிப்பிலும் அவர் அசத்தலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என வேளாண் விஞ்ஞானிகள் அவரை பாராட்டுகின்றனர். தற்போது அவரது நிலத்தில் 150 முந்திரி மரம், 300 பாக்கு மரம், 75 தென்னை மரம் மற்றும் வாழை பயிர் பயிரிடப்பட்டுள்ளனஅவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதுகூட தெரியாமல் அவர் நிலத்தில் வழக்கம்போல வேலை செய்து வந்துள்ளார். பத்திரிகையாளர்கள் அவரைத் தொடர்புகொண்ட அது குறித்து சொன்னபோது, ‘விருது கிடைத்ததில் மகிழ்ச்சிஎன கூறியுள்ளார்.