புனித பான்றேனஸ் இத்தாலியில் பிறந்து, சாக்ரடீஸ் கொள்கையை பின்பற்றினார். கிறிஸ்தவர்களுடன் தொடர்பு கொண்டு, கிறிஸ்துவையும் அவரது கோட்பாடுகளையும் நன்கு கற்றார். புனித மாற்குவின் சீடர்கள் நடத்தி வந்த மறைப்பள்ளியில் படித்து, இறையறிவில் வளர்ந்து, அப்பள்ளிக்கு தலைவரானார். இறைவாக்கினர்கள், திருத்தூதர்களின் போதனையை உள்வாங்கினார். இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து ஞானமும், அறிவுதிறனும் பெற்று தாழ்ச்சியுடன் வாழ்ந்தார். தனது வாழ்வை நெறிப்படுத்தி இறைவனுக்கு உகந்தவரானார். திருத்தூதர்களின் சிந்தனைகளை மக்களுக்கு போதித்தார். அமைதியின் கடவுளை சொந்தமாக்கி, அன்பிலும், அமைதியிலும் வாழ்ந்தார். தன்னிடம் வந்தவர்கள் இறைபிரசன்னம் உணர செய்தார். நற்செய்தியை இந்தியாவிலும் அறிவித்து, எண்ணற்றோரை மன மாற்றினார். கிறிஸ்துவின் பாதத்தடங்களில் நடந்து, இறைவாக்கினராக இறைபணி செய்த பான்றேனஸ் 216 ஆம் ஆண்டு இறந்தார்.