Namvazhvu
ஜூலை  14   புனித கமில்லஸ் தே லெல்லிஸ்
Thursday, 14 Jul 2022 11:24 am
Namvazhvu

Namvazhvu

புனித கமில்லஸ் தே லெல்லிஸ் இத்தாலியில் 1550 இல் பிறந்து, இறைபக்தியில் வளர்ந்து, முன்மதியோடு செயல்பட்டார். இளமையில் நெப்போலியன் போர்படையில் படைவீரரானார். படை முகாமில் சூதாட்டத்திற்கு அடிமையானார். போரின்போது 2 கால்களிலும் காயங்கள் ஏற்பட்டதால், போர்களத்திலிருந்து வெளியேறி உரோமையில் மருத்துவமனையில் பணியாற்றினார். உழைப்பும், திறமையும் மிகுந்த கமில்லஸ் கப்புச்சின் சபை பொதுநிலை சகோதரர் பிரிவில் சேர்ந்தார். புனித பிலி­ப்பு நேரியின் வழிகாட்டுத­லால், புனிதப்பாதையில் பயணித்தார். தனது 32 ஆம் வயதில் இயேசு சபை கல்லூரியில் இலத்தீன் பயின்று, குருவானார். 1584 ஆம் ஆண்டு, நல்மரணத்தின் தந்தையர்கள் என்ற சபையை நிறுவினார். பிளேக் நோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணி செய்தார். நோயாளிகள்மீது கரிசனை கொண்டு, இறைவல்லமையால் புதுமைகள் செய்து, நலமாக்கினார். துன்பங்களில் மரியாவிடம் சரணடைந்தார். நற்செய்தியை வாழ்வால் அறிவித்த கமில்லஸ் 1614 ஆம் ஆண்டு, ஜூலை 14 ஆம் நாள் இறந்தார்.