Namvazhvu
ஈராக்: “ஊர்” அருகே பல்சமய உரையாடலுக்கு கட்டடப்பணி தொடக்கம்
Thursday, 21 Jul 2022 07:20 am
Namvazhvu

Namvazhvu

கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத, மற்றும் செபெக் (Sabeic) மத நம்பிக்கையாளர்களின் வழிபாடு மற்றும், பல்சமய உரையாடல்களுக்காக ஈராக்கிலுள்ள ஆபிரகாமின் ஊரருகே எழுப்பப்படும் கட்டடம், நாட்டின் வன்முறை தீவிரவாதத்திற்கு ஒரு பதிலடியாக இருக்கும் என்று ஆய்வாளர் அகமது அப்தெல் ஹுசைன் அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட  திருத்தூதுப் பயணத்தின் பயனாக, பண்டைய நகரமான முதுபெரும்தந்தை ஆபிரகாமின்  Ur என்னும் ஊரில், பல்சமய உரையாடல் வளாகமும் ஆலயமும் அமைக்கப்படுவதற்கு  கட்டுமானப் பணிகள் பல்வேறு இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தலைவர்களின் கருத்துப்படி தொடங்க இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ஆய்வாளார் அப்தெல் ஹுசைன் கூறினார்,

தீவிரவாதக் குழுக்களாலும், போர் மற்றும் வன்முறைப் பேரழிவினாலும் கிறிஸ்தவ ஆலயங்களும் மசூதிகளும் தாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உருவாக்கப்பட இருக்கும் பல்சமய உரையாடல் கட்டடம், அதற்கு பெரும் பதிலடியாக இருக்கும் என்றும், நமது ஒற்றுமையின் பலத்தை இதன் வழியாக நாம் உலகுக்குக் காட்டுவோம் என்றும்ஆய்வாளர் அப்தெல் ஹுசைன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பண்டைய நகரமும், ஆபிரகாமின் ஊருமான இடத்தில் அமைக்கப்பட இருக்கும் இக்கட்டடம்  பல்சமய  உரையாடலுக்கான வளாகம், கிறிஸ்தவ ஆலயம், மசூதி, மற்றும் மண்டபம் என நான்கு பகுதிகளைக்கொண்டது எனவும், இது எல்லா மதத்தவர்களுக்கும் இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்தும் என்றும்இத்திட்டத்தை உருவாக்கியவரும் செயல்படுத்துபவருமான Dhi Qar மாநில துணை ஆளுனர் Ghassan Al-Khafaji அவர்கள் தெரிவித்துள்ளார்.