Namvazhvu
கொல்கத்தா திருத்தந்தையின் திருத்தூதர் தலைமையில் சிறப்புத் திருப்பலி
Tuesday, 26 Jul 2022 12:36 pm
Namvazhvu

Namvazhvu

கொல்கத்தா நகரில் உள்ள தூய ஜெபமாலை பேராலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் 2வது உலக தாத்தா - பாட்டிகள் தினமானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்தியா மற்றும் நேபால் நாடுகளுக்கான திருத்தந்தையின் திருத்தூதர் பேராயர் லியோபோல்டோ ஜிரெல்லி அவர்கள் திருப்பலியை தலைமையேற்று நடத்தி வைத்தார். அவரோடு மியான்மர் நாட்டின் கர்தினாலும்,  ஆசிய ஆயர்கள் குழுமத்தின் தலைவருமான சார்லஸ் மாவுங் போ அவர்களும், யங்கூனின் துணை ஆயர் ஜான் சா மற்றும் கல்கத்தா உயர்மறை மாவட்டத்தின் பேராயர் தாமஸ் டிசுசா அவர்களும் பங்கெடுத்தனர். ஒன்பது அருள்பணியாளர்களும் தூய ஜெபமாலை பேராலயத்தின் பேராலய தந்தை அவர்களும் திருப்பலியில் பங்கு கொண்டனர். திருப்பலியில் கலந்து கொண்ட முதியவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மேலும் பாராட்டும் விதமாக அவர்களுக்கு சிறு ரோசாப்பூவானது கொடுக்கப்பட்டது. திருப்பலியில் எட்டு இளையோருக்கு உறுதி பூசுதல் திருவருட்சாதனமும் வழங்கப்பட்டது. திருப்பலியில் கிறிஸ்துவம், இஸ்லாமியம் பௌத்தம் மற்றும் சீக்கிய சமயங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் பங்கு கொண்டார்கள்.

அப்போது கர்தினால் மாவுங் போ, “பல மதங்களை சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து இங்கு வந்திருப்பது ஒற்றுமையையும், ஒருவருக்கொருவர் தாங்கி பிடிப்பதையும் காட்டுகிறது. நாம் அனைவருமே சேர்ந்து உலக அமைதிக்காக செபிப்போம்” என்று கூறினார்.