புனித பேதுரு ஜூலியன் ஐமார்ட் பிரான்சில் 1811 ஆம் ஆண்டு பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், இறையன்பின் நற்பண்புகளில் செல்வந்தராக வாழ்ந்தார். இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, 1834 ஆம் ஆண்டு குருவானார். நாளும் இறைவார்த்தையின் வழியில் பயணித்தார். அன்னை மரியாவிடம் பக்தியும், பற்றும் கொண்டு இறையாட்சி பணி செய்தார். நற்கருணை முன்பாக நேரம் செலவிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். நற்கருணை ஆண்டவர்மீது அதிக பக்தி கொண்டிருந்தார். பங்கு மக்களை நற்கருணை ஆராதனையில் பங்கேற்க செய்தார். “தினமும் திருப்பலி காணுங்கள், நாள் முழுவதும் அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும், அதன் மூலம் உங்கள் அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்ய இயலும்” என்றார். ‘நற்கருணையின் திருத்தூதர்’ என்று அழைக்கப்பட்ட பேதுரு ஜூலியன் ஐமார்ட், 1868 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 1 ஆம் நாள் இறந்தார்.