புனித ஜான் மரிய வியான்னி பிரான்சில் 1786 ஆம் ஆண்டு, மே 8 ஆம் நாள் பிறந்தார். 13 ஆம் வயதில் நற்கருணை பெற்றார். அன்னை மரியாவின் அன்பை பெற்று, நம்பிக்கையில் வளர்ந்தார். இறையியல் இலயன்ஸ் நகரில் முடித்து 1815 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12 ஆம் நாள் குருவானார். நோயாளிகள், ஆதரவற்றோருக்கு இல்லம் நிறுவினார். குழந்தைகளுக்கு இலவச கல்வி புகட்டினார். பிறரைப் புனிதப்படுத்த தன்னை புனிதப்படுத்தினார். எல்லா அருள்வரமும் இறைவனிடமிருந்து வருவதால் அவரோடு இடைவிடாமல் செபித்தார். பங்கு மக்களின் மனமாற்றத்திற்கு நற்கருணை ஆண்டவரிடம் செபித்தார். ஒருநாளில் பலமணி நேரம் ஒப்புரவு வழங்கினார். 4 மணி நேரம் உறங்கினார். தாழ்ச்சி என்ற புண்ணியம் வழி பலரைக் கிறிஸ்துவோடு இணைத்தார். இறையன்பராகவும், ஏழ்மையின் இலக்கணமாகவும், தூயவராகவும், ஆன்ம ஆலோசகராகவும் வாழ்ந்து, 1859 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 4 ஆம் நாள் இறந்தார். இவர் அனைத்து பங்கு குருக்களின் பாதுகாவலர்.