புனித மரிய மக்கில்லப் ஆஸ்திரேலியாவில் 1842 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். இறைஞானத்திலும், அறிவிலும் வளர்ந்து இறைபணி செய்ய ஆவல் கொண்டார். தந்தை ஜூலியன் என்பவரால் தொடங்கப்பட்ட தூய வளனாரின் திரு இதய சபையின் முதல் உறுப்பினரானார். ஏழைகளின் நல்வாழ்வுக்கும், குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும் அயராது உழைத்தார். அனைத்தையும் விசுவாசத்தின் அடிப்படையில் கண்டார், நம்பினார், செயல்படுத்தினார். இரவிலும், பகலிலும் இறைவனோடு உரையாடி இறைபிரசன்னத்தில் நிலைத்திருந்தார். எண்ணற்ற நோயாளிகளை நலமாக்கினார். அன்னை மரியாவின் அருள் பெற்று, ஐரோப்பிய நாடுகளில் இறைபணி செய்த மரிய மக்கில்லப் 1901 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 8 ஆம் நாள் இறந்தார்.