Namvazhvu
​​​​​​​கேப்ரில்லா மின்ஜ் இறைநம்பிக்கை ஒன்றே போதும்
Tuesday, 02 Aug 2022 13:12 pm
Namvazhvu

Namvazhvu

கேப்ரில்லா மின்ஜ் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார். இந்திய தலைநகரின் புறநகர் பகுதிகளில் தன் கணவரோடும்  இரு பிள்ளைகளோடும் இரண்டு அறைகள் கொண்ட ஒரு சிறிய இல்லத்தில் வசித்து வருகிறார். அந்த இரு அறைகளும் தேவைக்கு ஏற்றாற் போல படிக்கும் அறையாகவும், பொழுதுபோக்கும் அறையாகவும், இரவில் உறங்கும் அறையாகவும், உணவு சமைக்கும் மற்றும் உண்ணும் அறையாகவும் என பல பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது, பிணம் கேப்ரில்லா மின்ஜ், “இந்த சிறிய வீட்டை பெறுவதற்கு நாங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஏனெனில் டெல்லியின் புறநகர் பகுதியில் வசிக்கும் பல பழங்குடி மக்களுக்கு, இருக்க சிறு குடிசை கூட இல்லை,” என்று கூறினார். கேப்ரில்லா மின்ஜ் சட்டீஸ்கரில் இருந்து, ஏழ்மையின் காரணமாக வேலை தேடி இங்கு புலம்பெயர்ந்தவர். ஏழ்மையின் கொடூர முகத்தை கண்டவர். இவரை போலவே இங்கு இருக்கும் பல மக்களும் ஏழ்மையினால் புறம்தள்ளப்பட்டு இங்கே ஒன்று கூடி வாழ்ந்து வருகிறார்கள். கேப்ரில்லா மின்ஜ் அன்னை மரியாள் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர். அனுதினமும் குடும்பமாக இணைந்து செபிப்பது, செபமாலை சொல்வது என்று தன் குடும்பத்தை கட்டமைத்திருக்கிறார். இங்கு வாழும் பெரும்பான்மை இந்து சகோதர சகோதரிகளுக்கு கேப்ரில்லா மின்ஜ் போன்ற கிறிஸ்தவர்கள் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். “அவர்கள் எங்களுடைய எளிமையான வாழ்க்கை மற்றும் நட்பை பாராட்டுகிறார்கள். பல பிற மத சகோதர சகோதரிகள் எங்களின் நம்பிக்கை வாழ்வை பார்த்து கத்தோலிக்கர்களாக மாறுவதற்கு ஆசைப்படுகிறார்கள். இவை அனைத்தும் ஆண்டவர் இயேசுவின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் கனிகளேஎன்று மின்ஜ் கூறினார்.

இவரு இரு பிள்ளைகள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் மின்ஜிக்கு 18 வயதில் மரியம் என்கிற பெண் பிள்ளை ஒருவரும், 17 வயதில் ஆண்டனி என்கிற ஆண் பிள்ளை ஒருவரும் இருக்கிறார்கள். இருவருமே மறைமாவட்டம் நடத்துகிற பள்ளியில் நன்றாக படித்து வருகிறார்கள். மின்ஜின் கணவர் அருன் தன் மனைவியை பற்றி, “எங்களை சூழ்ந்து வாழும் இந்து உறவினர்களுக்கு என் மனைவி, உண்மையான கத்தோலிக்க பெண்மணியின் அடையாளமாக இருக்கிறார். இது கண்டிப்பாக இவரது எளிமையான வாழ்க்கை முறையாலும், துன்பத்தில் இருப்பவருக்கு உதவும் தன்மையாலும் சாத்தியம், என்று நான் நம்புகிறேன் என்று கூறினார். மின்ஜ்  எங்களை சுற்றி வாழும் இந்து உறவினர்கள் எப்பொழுது கிறிஸ்மஸ் மற்றும் ஈஸ்டர் விழாக்கள் வரும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் அத்திருவிழா நாட்களில் நான் தயாரிக்கும் உணவை உண்டு மகிழ்வார்கள்,” என்று கூறினார். இந்து சார்பு பாரதிய ஜனதா கட்சி ஆளும் இந்திய நாட்டில், கிறிஸ்தவர்கள் பிறரை வலுக்கட்டாயமாக மதமாற்றுகிறார்கள் என்றெழும் குற்றச்சாட்டு, பொய் என கேப்ரில்லா மின்ஜ், அவரது கணவர் மற்றும் அவரது பிள்ளைகள் நிரூபித்துவிட்டனர்