Namvazhvu
ஆகஸ்ட் 17  புனித ஹயசின்த்
Saturday, 13 Aug 2022 07:49 am
Namvazhvu

Namvazhvu

புனித ஹயசின்த் போலந்தில் 1185 ஆம் ஆண்டு பிறந்தார். கல்வி கற்று இறைஞானத்தில் வளர்ந்தார். சட்டம் பயின்று, முனைவர் பட்டம் பெற்றார். புனித தோமினிக் துறவு இல்லத்தின் துறவியானார். நற்செய்தியை போதிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார். இறைவார்த்தையை போதிப்பவராக மட்டும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். தவமுயற்சிகள் செய்து தூயவரானார். ஏழைகளுக்கு உதவிகள் செய்தார். புதுமை செய்யும் வரம் பெற்றிருந்தபோது, மக்களின் தேவைகளை நிறைவேற்றினார். பல்வேறு நாடுகளில் நற்செய்தி அறிவித்து, இறையரசை நிறுவினார். கீவ் என்ற இடத்தில் மங்கோல் பிரிவினர் ஆலயத்தை தாக்கியபோது, நற்கருணை பாத்திரத்தையும், அன்னை மரியாவின் சொரூபத்தையும் பாதுகாத்தார். இறையருள் பெற்று தூயவராக, புதுமைகள் செய்த ஹயசின்த் 1257 ஆண்டு, ஆகஸ்ட் 17 ஆம் நாள் இறந்தார்.