Namvazhvu
ஆகஸ்ட் 18  புனித ஹெலினா
Friday, 19 Aug 2022 06:24 am
Namvazhvu

Namvazhvu

புனித ஹெலினா சிரியாவில் 248 ஆம் ஆண்டு பிறந்தார். முதலாம் கான்ஸ்டன்யஸ் என்பவரை திருமணம் செய்தார். கான்ஸ்டன்டைன் என்ற ஒரு குழந்தைக்கு தாயானபோது, கணவரால் புறக்கணிக்கப்பட்டார். தனது மகன் மில்வியன் பாலத்தில் நடந்த போரில் வெற்றி பெற்று, 312 ஆம் ஆண்டு பேரரசராகி கிறிஸ்துவை பின்பற்றினார். கைம்பெண்ணாக இருந்த ஹெலினா தனது மகனைப் பின்பற்றி கிறிஸ்தவரானார். கிறிஸ்துவின் விழுமியங்களை தனதாக்கி ஏழைகள், கைவிடப்பட்டோருக்கு உதவினார். நாட்டு மக்கள் நற்பண்பிலும், அன்பிலும் வளரவும், அடிப்படை வசதிகள் பெற்றுக்கொள்ளவும் ஆலயங்கள் எழுப்பினார். இயேசு பிறந்த புண்ணிய பூமிக்கு திருப்பயணம் செய்தார். இயேசுவின் சிலுவையை கண்டறிந்து, உலகிற்கு அறிமுகம் செய்த ஹெலினா 330 ஆம் ஆண்டு இறந்தார்.