புனித யோவான் எவுதஸ் பிரான்சில் 1601 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள் 14 ஆம் நாள் பிறந்தார். இறை அழைப்பை உணர்ந்து, தனது 14 ஆம் வயதில் கற்பு வார்த்தைப்பாடு கொடுத்தார். 1623 ஆம் ஆண்டு, மார்ச் 25 ஆம் நாள், பிரெஞ்சு ஆட்டரி என்னும் துறவு சபையில் சேர்ந்து, 1625 ஆம் ஆண்டு, டிசம்பர் 20 ஆம் நாள் குருவானார். இறையாற்றல் பெற்று, சிறப்பாக மறையுரை நிகழ்த்தினார். 1641 இல் சகோதரிகள் சபை நிறுவினார். இதை திருத்தந்தை 7 ஆம் அலெக்ஸாண்டர் அங்கீகரித்தார். இயேசு, மரியா துறவற சபையையும் உருவாக்கினார். 110 மறைபணி தளங்களில் போதித்தார். திருஇருதய ஆண்டவர் பக்தியை ஆரம்பித்தார். இயேசுவின் திருஇருதய, கன்னி மரியாவின் மாசற்ற இருதய வழிபாட்டு செபமுறைகள் ஏற்படுத்தினார். நற்கருணை ஆண்டவர்மீது அதிக அன்பு கொண்டிருந்தார். சமூகத்தில் மனித நேயத்துடன் வாழ்ந்து 1680 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19 ஆம் நாள் இறந்தார்.