புனித பத்தாம் பத்திநாதர் பிரான்சில் 1835 ஆம் ஆண்டு நாள் பிறந்தார். கடின உழைப்பின் மேன்மையையும், வறுமையையும் உணர்ந்திருந்தார். நாள்தோறும் விவிலியம் வாசித்து செபித்தார். இறைவனையும், அயலானையும் அன்பு செய்து, 1858 இல் குருவானார். ஆன்மாக்களின் மீட்புக்காக அயராது உழைத்தார். துன்புற்ற மக்களை தேடிச்சென்று, ஆறுதல்கூறி தேற்றினார். இவரது மறையுரையால் தீயவர்கள் மனம் மாறினர். பல மணிநேரம் ஒப்புரவு கேட்டார். இறைவன் வாழும் ஆலயங்களை எழுப்பினார். அன்பின் சேவை செய்து, 1884 ஆம் ஆண்டு, ஆயரானார். மக்களின் நலனுக்காகவும், ஆன்மீக வளர்ச்சிக்காகவும் உழைத்தார். தொழிலாளர்கள் மீது கவனம் செலுத்தினார். 1893 இல் கர்தினால் ஆனார். நற்கருணையின் தந்தை என்று அழைக்கப்பட்டார். 1903 இல் திருத்தந்தையாகி, அனைத்தையும் கிறிஸ்துவில் புதுப்பித்து, 1914 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 20 ஆம் நாள் இறந்தார்.