புனித பெர்னார்ட் தாலமி சியன்னாவில் 1272 ஆம் ஆண்டு, மே 10 ஆம் நாள் பிறந்தார். கல்வி கற்று, அறிவில் வளர்ந்தபோது, துறவு வாழ்வை விரும்பினார். திரு அவை சட்டம் பயின்றார். ஜெர்மனியில் இராணுவத்தில் போர் வீரராகப் பணி செய்து, அனைவரின் உள்ளமும் கவர்ந்தார். எதிர்பாராமல் கண்பார்வை இழந்து, தனிமையில் இறைவனிடம் தஞ்சம் புகுந்தார். அன்னை மரியாவிடம் செபித்து, மீண்டும் பார்வை பெற்றார். 1313 ஆம் ஆண்டு தனிமையில் செபித்து, இறையருள் பெற்றார். அன்னை மரியாவிடம் பக்தியும், அன்பும் கொண்டிருந்தார். தனது தூய வாழ்வால் பலர் அவரோடு இணைந்தனர். 1319 இல் ஆசீர்வாதப்பர் சபை விதிமுறைகள் பின்பற்றினார். அரேஸோவில் பிளேக் நோய் பரவியபோது, பெர்னார்ட் தனது துறவிகளுடன் சென்று உதவினார். இறந்தவர்களை நல்லடக்கம் செய்தார். 27 ஆண்டுகள் தம் துறவிகளை நல்வழிப்படுத்தி, 1348 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 20 ஆம் நாள் இறந்தார்.