புனித லீமா ரோஸ் தென் அமெரிக்காவில் 1586, ஏப்ரல் 20 ஆம் நாள் பிறந்தார். இயேசு, அன்னை மரியாவிடம் பக்திகொண்டு, கிறிஸ்தவ வாழ்வின் அடித்தளமான அன்பில் வளர்ந்தார். தனது கற்பை இறைவனுக்கு அர்ப்பணித்து, 20 ஆம் வயதில் சாமிநாதரின் 3 ஆம் சபையில் சேர்ந்தார். துன்பங்கள் இன்றி வாழ்க்கையில்லை, சிலுவை இல்லாமல் கிறிஸ்தவ வாழ்வும் இல்லை என்பதை உணர்ந்து வாழ்ந்தார். ஆண்டவரே எனது துன்பத்தை அதிகமாக்கும். எனது இதயத்தில் உம்மீதுள்ள அன்பை பெருகச் செய்யும். கொள்ளையர்கள் நற்கருணை உள்ள ஆலயத்தை இடித்தபோது, “என்னை சிறு துண்டுகளாக வெட்டுங்கள். என்னை கொலை செய்யும் நேரமாவது நற்கருணை பாதுகாக்கப்படட்டும்” என்று கூறி, இறைவனை தூய இதயத்தால் அன்பு செய்து, வேதனைகளை இன்முகத்தோடு ஏற்று, கிறிஸ்துவின் நெஞ்சிலே சாய்ந்து செபித்து, இறைவார்த்தையை வாழ்வாக்கி, 1617 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24 ஆம் நாள் இறந்தார்.