புனித பர்த்தலமேயு என்றால் இறைவனின் கொடை. இயேசுவின் சீடர்களில் ஒருவர். உண்மையான இஸ்ரயேலர் என்று, இயேசுவிடமிருந்து நற்சான்று பெற்றவர். ஏழ்மையை விரும்பி, ஏழையில் தூயவராக வாழ்ந்தார். இயேசு இறைமகன் என்று நம்பிக்கை அறிக்கையிட்டார். இந்தியா வந்த பர்த்தலமேயு, அஸ்டரூத் கோவிலில் திருப்பயணியாக வாழ்ந்தார். குணமளிக்கும் இறைவல்லமை பெற்றிருந்தார். மக்களால் பெரிதும் மதித்து, அன்பு செய்யப்பட்டார். இறைவல்லமையால் மக்களின் குறைகளை அகற்றினார். பாலிமியஸ் அரசர் திருமுழுக்கு பெற்றார். பர்த்தலமேயு அரசரின் நன்மதிப்பை பெற்றார். பக்கத்து நாட்டு அரசர் ஏஸ்ட்ரிகஸ் வஞ்சக உள்ளத்துடன் தனது நாட்டிற்கு போதிக்க வருமாறு அழைத்து, சிறையில் அடைத்து துன்புறுத்தினான். 68 ஆம் ஆண்டு உயிருடன் தோலை உரித்து, தலைகீழாக நிறுத்தி, தலையை வெட்டிக் கொலை செய்து உடலை கடலில் எறிந்தான்.