புனித ஒன்பதாம் லூயிஸ் பிரான்சில் 1214 ஆம் ஆண்டு பிறந்தார். கிறிஸ்துவின் விழுமியங்களில் வளர்ந்து, மரியாவின் அன்பும், அரவணைப்பும் பெற்று, பாவமின்றி தூயவரானார். லூயிஸ் புகழ் பெற்ற போர்வீரர். 19 ஆம் வயதில் மார்க்கிரேட் என்ற பெண்ணை திருமணம் செய்தார். 5 மகன்களும், 6 மகள்களுக்கும் தந்தையானார். 1248 இல் நடந்த சிலுவைப் போரில் பங்கேற்றார். கிறிஸ்தவ மக்களை பாதுகாத்தார். போரில் தோல்வியுற்றதால் லூயிஸ் மன்சோரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் துறவிகளுடன் இணைந்து, செபம் செய்து, சிறையிலிருந்து விடுதலையானார். அமைதியின் வழியில் அன்பு, இரக்கம், நீதியை பின்பற்றினார். கல்வி, கலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். பண்புடன் ஏழைகளை அன்பு செய்தார். நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் கட்டினார். இயேசுவின் கடைசி இரா உணவின் நினைவாக, ஏழைகளின் பாதங்கள் கழுவி, 1270 இல் இறந்தார்.