புனித ரெய்மண்ட் நொனாதுஸ் ஸ்பெயின் நாட்டில் 1204 ஆம் ஆண்டு, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் தாயை இழந்தார். குழந்தைப்பருவம் முதல் பக்தியிலும், திறமையிலும் வளர்ந்தார். இளமைப்பருவத்தில் தந்தையின் அனுமதியும், ஆசீரும் பெற்று இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்தார். பார்செலோனா என்ற இடத்தில் மார்சிடாரியன் சபையில் சேர்ந்து, அடிமைகளை விடுவித்தார். அடிமைகளை மீட்க அடிமையாக மாறினார். சிறையில் அடிமைகளாக வாழ்ந்த மக்களிடம், கிறிஸ்துவை அறிவித்தார். இதனால் பலர் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டனர். சிறைவாழ் மக்களிடம் கிறிஸ்துவை அறிவித்ததால், ஆத்திரம் அடைந்த அதிகாரி நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய ஆணியால் உதடுகளை ஓட்டைப் போட்டான். கிறிஸ்துவின் பொருட்டு 1240 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 31 ஆம் நாள் மறைசாட்சியாக இறந்தார்.