புனித ஜைல்ஸ் கிரீஸ் நாட்டில் 650 ஆம் ஆண்டு பிறந்தார். இறையன்பில் வளர்ந்து, உலகையும் அதன் இன்பங்களையும் துறந்து புனிதராக விரும்பினார். நிமெஸ் வனப்பகுதியில் தனிமையில் இறைவனோடு இருப்பதில் ஆனந்தம் அடைந்தார். தூய ஆவியின் அருள்பெற்று, இறைவனுக்கு தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்தார். உல்லாச வாழ்வில் சிக்கிவிடாதபடி கவனம் செலுத்தினார். வனத்தில் பல்லாண்டு தவம் செய்தபோது, ஒரு பெண்மான் அவருக்கு உதவி செய்தது. இயற்கையை அன்பு செய்தார். மக்களின் தேவைகளை முன்னிட்டு புதுமைகள் செய்தார். வசிகோத்ஸ் நாட்டு அரசன் இவரின் இறையாற்றலை உணர்ந்து, துறவு இல்லம் அமைத்து கொடுத்தார். ஜைல்ஸ் ஆசீர்வாதப்பரின் விதிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தார். நோயாளர்களை குணமாக்கி, அன்பு செய்தார். கிறிஸ்துவை அளவில்லாமல் அன்பு செய்து, நற்செயல் புரிந்த ஜைல்ஸ் 710 ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 ஆம் நாள் இறந்தார்.