புனித வில்லியம் ரோஸ்கில்ட் இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். கல்வி கற்று அறிவில் சிறந்து விளங்கினார். குடும்ப செபங்களில் பங்கேற்று பக்தியிலும், ஞானத்திலும் வளர்ந்து, இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து குருவானார். டென்மார்க்கின் அரசர் அரண்மனையில் அரசுபணியும், இறைபணியும் செய்தார். இப்பகுதியில் சிலைவழிபாட்டிலும், மூடநம்பிக்கையிலும் வாழ்ந்தவர்கள் மனதில் நற்செய்தி வழி கிறிஸ்துவின் ஒளி ஏற்றினார். இறையாட்சி பணியாலும், தூய வாழ்வாலும் எண்ணற்ற மக்களை கிறிஸ்துவோடு ஒன்றிணைத்தார். நன்மைகள் செய்ய வாய்ப்பு கிடைத்தபோது, நன்கு பயன்படுத்தினார். நற்செய்தியை தமது சொல்லாலும், செயலாலும், வாழ்வாலும் அறிவித்த வில்லியம், 1044 ஆம் ஆண்டு ஆயரானார். அரசனின் தவறுகளை தைரியத்துடன் கண்டித்தபோது, அரசன் மனம் மாறி ஆயரின் நண்பரானார். கிறிஸ்துவுக்காக வாழ்ந்த வில்லியம் 1070ஆம் ஆண்டு இறந்தார்.