புனித ரோஸ் விற்றர்போ இத்தாலியில் 1233 ஆம் ஆண்டு பிறந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும், இறையன்பின் செல்வரானார். குழந்தைப்பருவம் முதல் தவ முயற்சிகள் மேற்கொண்டார். புதுமைகள் செய்யும் வரம் பெற்றிருந்தார். அன்னை மரியாவிடம் அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். துன்பங்கள், கவலைகள், ஏமாற்றங்கள் சந்தித்தபோது, அன்னை மரியாவின் துணை நாடினார். பிரான்சிஸ்கன் 3 ஆம் சபையில் துறவியானார். இயேசுவின் துன்பப்பாடுகளை அதிகம் தியானித்து அருள் பெற்றார். ஜெர்மனி அரசர் இரண்டாம் ஃப்ரடெரிக் திருத்தந்தைக்கு எதிராக செயல்பட்டபோது, ரோஸ் அன்னை மரியாவின் துணையுடன் திருத்தந்தையின் அதிகாரம், ஆசீர் குறித்தும் நகர் வீதிகளில் போதித்தார். “இயேசு எனது பாவங்களுக்காக அடிப்பட்டார் எனில் அவருக்காக அடிப்பட நானும் தயாராக இருக்கிறேன். நான் என்ன செய்யவேண்டும் என்று ஆண்டவர் எனக்கு உணர்த்துகிறாரோ அதையே செய்கிறேன்” என்று கூறி 1252 ஆம் ஆண்டு, மார்ச் 6 ஆம் நாள் இறந்தார்.