Namvazhvu
செப்டம்பர்  5 புனித அன்னை தெரசா
Thursday, 08 Sep 2022 06:54 am
Namvazhvu

Namvazhvu

புனித அன்னை தெரசா யூகோஸ்லாவியாவில் 1910, ஆகஸ்ட் 26 ஆம் நாள் பிறந்தார். புனிதர்களின் சரிதையும், கொல்கத்தாவில் பணியாற்றும் துறவிகளின் கடிதங்களையும் வாசித்து, இந்தியாவில் இறைபணி செய்ய விரும்பினார். 1931, மே 24 ஆம் நாள் முதல் வார்த்தைப்பாடுகள் வழி இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்தார். ஆசிரியர் பணி செய்த தெரசா கொல்கத்தா சேரியில் வாழும் மக்களுக்கு பணி செய்ய வத்திக்கான் அனுமதியுடன் 1948, ஆகஸ்ட் 16 ஆம் நாள் 5 ரூபாயுடனும் மோட்டிஜில் சேரியில் தனது இறைபணியை ஆரம்பித்தார். இயேசுவை விரும்பி, நேசித்து, காற்றாய் சுவாசித்து, இறைபிரசன்னமாக பணித்தளங்களுக்கு சென்றார். ஏழைகள், அனாதைகள், தொழுநோயாளிகள், ஒதுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்கு அன்பின் அன்னையானார். பிறரன்பு பணிகளுக்கு புது அர்த்தம் கொடுத்தார். துன்புறும் ஏழைகளுக்கு கனிவின் கரமானார். “நான் கிறிஸ்துவின் ஒளியை பரப்பும் ஒரு கண்ணாடி மட்டுமேஎன்று கூறி 1997 ஆம் ஆண்டு, செப்டம்பர் 5 ஆம் நாள் இறந்தார்.