புனித எலியத்தூரியஸ் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். கிறிஸ்துவின் ஏழ்மையைப் பின்பற்றி, எளிமையின் வடிவமானார். நேர்மையும், உழைப்பும் வாழ்வின் படிகற்களாக்கி, புதுமைகள் வழி நற்செயல்கள் செய்த இறைமனிதர். புனித மாற்கு துறவு இல்லத்தில் துறவியானார். சில நாட்களில் துறவு இல்லத்தின் தலைவராக பொறுப்பேற்று, துறவிகளை இறைவழி நடத்தினார். தூயவரான எலியத்தூரியஸ் தீய ஆவியால் துன்புற்ற சிறுவனை நலமாக்கினார். தனது தவறுகளுக்கு மனம்வருந்தி, நோன்பிருந்து, பரிகாரம் செய்து செபித்தார். திருத்தந்தை பெரிய கிரகோரியாருக்கு எப்பொழுதும் உதவியாக செயல்பட்டார். செபம் தனது வாழ்வின் உயிர்மூச்சாக கொண்டிருந்தார். துறவு மடத்தின் தலைமை பொறுப்பைத் துறந்து, உரோமையிலுள்ள புனித ஆண்ட்ரூ துறவு மடத்தில் சேர்ந்தார். இறைவார்த்தையை இதயத்தில் சுமந்து, கிறிஸ்துவின் பாதையில் பாதங்கள் பதறாமல் பயணம் செய்து, 585 ஆம் ஆண்டு இறந்தார்.