புனித பியோ இத்தாலியில் 1887 ஆம் ஆண்டு, மே 25 ஆம் நாள் பிறந்தார். “செபமே இறைவனின் இதயத்தைத் திறக்கும் திறவுகோல்” என்றுகூறி, ஆர்வமுடன் செபித்தார். விவிலியம், புனிதர்களின் சுயசரிதை வாசித்து, தவ ஒறுத்தல்கள் செய்து இதயத்தில் இறைவனுக்கு முதலிடம் கொடுத்தார். இறையன்பை தியானித்து இறைபிரசன்னம் பெற்றார். நற்கருணைப் பேழை, அன்னை மரியாவின் முன் செபிப்பதில் மகிழ்ந்தார். கப்புச்சின் சபையில் துறவு மேற்கொண்டு 1910 இல் குருவானார். நாளும் கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் வார்த்தைப்பாட்டைப் புதுப்பித்தார். இயேசு, தனது ஐந்து காயங்களையும் பியோவின் உடலில் பதித்தார். “அன்னை மரியாவை அன்பு செய்யுங்கள், அன்றாடம் செபமாலை செபியுங்கள், உலகத்தின் தீமைகளை வெல்ல அதுதான் சிறந்த ஆயுதம்” என்றார். உலக அமைதிக்காக செபித்து, செபிக்கும் ஏழை துறவியாக வாழ்ந்து 1968 ஆம் ஆண்டு, செப்டம்பர் 23 ஆம் நாள் இறந்தார்.