புனித ஜெரார்டு சாக்ரெதோ வெனிஸில் 980ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் நாள் பிறந்தார். பெற்றோர் வழி இறையன்பை சுவைத்தார். அயலானில் கிறிஸ்துவின் முகம் கண்டார். இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து ஆசீர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்ந்தார். கல்வி பணியுடன் நற்செய்தியை அறிவித்து ஆயரானார். இறைமக்களின் நலன் முன்னிட்டு இறைபணி செய்தார். மக்களின் தேவைகளை நிறைவேற்றினார். கிறிஸ்துவின் விழுமியங்களைப் போதித்தபோது தீய வாழ்வில் ஈடுபட்டவர்கள் மனந்திரும்பி நேர்வழி சென்றனர். ஏழைகளை சுரண்டியவர்களை கண்டித்தார். அரசர் இறந்தவுடன் கிறிஸ்துவை ஏற்காதவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தபோது அவற்றிற்கு எதிராக குரல் கொடுத்தார். திருப்பலியை பக்தியுடன் நிறைவேற்றி இறையருளின் செல்வரானார். 1046 இல் எதிரிகள் கைது செய்து மலைக்கு இழுத்து சென்று அடித்து கொலை செய்தனர்.