புனித முதலாம் கலிஸ்துஸ் தான் கிறிஸ்தவர் என்று பெருமையுடன் கூறி, புண்ணிய செயல்கள் செய்தார். உரோமையில் கார்போபோரஸ் என்பவரிடம் பணம் பாதுகாக்கும் பணி செய்தார். தன்னிடம் இருந்த பணத்தை தொலைத்துவிட்ட காரணத்தால், கைதியாக சுரங்கத்தில் வேலைக்கு சென்றார். அரசி மார்சியா என்பவரின் உதவியால் விடுதலையானார். திருத்தந்தை செப்பரினஸ் திருத்தொண்டராக நியமித்து, கிறிஸ்தவர்களின் கல்லறையை பாதுகாக்கும் பணிக்கு அமர்த்தினார். 217 ஆம் ஆண்டு, திருத்தந்தையாக அருள்பொழிவு பெற்றார். திரு அவைக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டென முழங்கினார். 18 ஆண்டுகள் திரு அவையில் தப்பறைகளை போதித்து, தனக்கு இடைஞ்சல் செய்த இப்போலித்து என்பவரை மன்னித்து அன்பு செய்தார். பாவம் செய்வதை கடவுளின் உதவியால் மட்டுமே கைவிட இயலும் என்றார். இறையன்பராக வாழ்ந்து, 222 ஆம் ஆண்டு, இறந்தார்.