Namvazhvu
அக்டோபர் – 19  புனித சிலுவை பவுல்
Tuesday, 18 Oct 2022 08:54 am
Namvazhvu

Namvazhvu

புனித சிலுவை பவுல் இத்தாலியில் 1694 ஆம் ஆண்டு, ஜனவரி 3ஆம் நாள் பிறந்தார். சிலுவை முன்பாக அதிகநேரம் இயேசுவின் துன்பாடுகளை நினைத்து தியானித்து செபித்தார். திருப்பலியில் தவறாமல் பங்கேற்றார். ஓய்வுநேரங்களில் நற்கருணை ஆண்டவர் முன்பாக செபிப்பது வழக்கம். நல்ல நூல்கள், விவிலியம், புனிதர்களின் சரிதைகளை வாசித்திதார். செல்வாக்கு மிகுந்த வாழ்வை துறந்து ஏழ்மையை பின்பற்றி துறவு மேற்கொண்டு இயேசுவின் பாடுகளை தியானித்து, இறையருள் பெற்று அருள்மிகுந்த குருவானார். திருப்பாடுகளின் சபையை உருவாக்கினார். புண்ணியங்கள் அனைத்தையும் பின்பற்றி எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். இயேசுவின் பாடுகளை மகிமைப்படுத்துங்கள் என்றுகூறி திருச்சிலுவை பவனி நடத்தினார். ஆன்மாக்களின் மீட்புக்காக அயராது உழைத்து பலரை மனந்திருப்பினார். ஓய்வின்றி முழுமூச்சுடன் கிறிஸ்துவை பறைசாற்றி 1775 ஆம் ஆண்டு, அக்டோபர் 198 ஆம் நாள் இறந்தார்.