புனித ஹிலாரியோன் பாலஸ்தீன் நாட்டில் 292 ஆம் ஆண்டு பிறந்தார். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். பொழுதுபோக்கிற்கு வாய்ப்புகள் மிகுந்த அலெக்ஸாந்திரியாவில், உயர் கல்விக்கு சென்றார். உல்லாச வாழ்வை துறந்து, கூடிசெபிக்கின்ற கிறிஸ்தவர்களை தேடிச் சென்றார். பாலைவனத்தில் துறவியாக வாழ்ந்த அந்தோனியாரை சந்தித்து, இரண்டு மாதங்கள் அவருடன் தங்கி இறையனுபவமும், இறையற்றாலும் பெற்றார். செபம், தவம், ஒறுத்தல்கள் செய்து துறவு மேற்கொண்டார். தனது உடமைகளை விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். குடிசை அமைத்து இடைவிடாமல் செபித்து, மக்களுக்கு இறையருள் வழங்கினார். சாக்கு உடையணிந்து தினமும் நோன்பிருந்தார். அத்திப்பழங்களை உணவாக அருந்தினார். கிறிஸ்துவை மறுதலித்த ஜூலியன் இவரை கைது செய்ய முயன்றபோது, டால்மாஷியா, சைப்ரஸ் தீவிற்கு சென்று இறைபணி செய்து, 372 ஆம் ஆண்டு இறந்தார்.