Namvazhvu
அக்டோபர் 23 புனித யோவான் கப்பிஸ்திரான்
Friday, 21 Oct 2022 10:25 am
Namvazhvu

Namvazhvu

புனித யோவான் கப்பிஸ்திரான் இத்தாலியில் 1386 ஆம் ஆண்டு, ஜூன் 24 ஆம் நாள் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் இறைபக்தியிலும், புண்ணிய வாழ்விலும் வளர்ந்தார். சட்டம் படித்து இறைஞானம், அறிவு மிகுந்தவராகவும் நேப்பிள்ஸ் அரசர் லடிஸ்லாஸ் பெருஜியாவின் ஆளுநராக பணி செய்தார். உலக இன்பங்களைத் துறந்து, பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து, மறைப்பணியாளராகப் பணியாற்றினார். 1425 ஆம் ஆண்டு, குருவாக அருள்பொழிவு பெற்று, இறையன்பை உலகிற்கு அறிவித்தார். ஆன்மாக்கள் மீட்பு பெற ஓய்வின்றி இடையராது போதித்த சிறந்த மறையுரையாளர். ப்ரெசியாவில் 1,20,000 மக்கள் இவரது மறையுரையைக் கேட்டனர். இயேசுவின் பெயரால் சிலுவை அடையாளம் வரைந்து, நோயாளிகளைக் குணப்படுத்திய யோவான் கப்பிஸ்திரான், 1456 ஆம் ஆண்டு, அக்டோபர் 23 ஆம் நாள் இறந்தார். இவர் நீதிபதிகளின் பாதுகாவலர்.