Namvazhvu
அக்டோபர் 24    புனித அந்தோணி மரிய கிளாரட்
Friday, 21 Oct 2022 10:43 am
Namvazhvu

Namvazhvu

புனித அந்தோணி மரிய கிளாரட் ஸ்பெயின் நாட்டில் 1807 ஆம் ஆண்டு பிறந்தார். இறைபக்தியில் வளர்ந்து, ஓய்வு நேரங்களில் லத்தீன் மற்றும் பிரென்ச் மொழிகளை கற்றார். தனது 10 ஆம் வயதில், இயேசுவை இதயத்தில் ஏற்றுக்கொண்டார். இயேசுவே நீர் என்னை புனிதனாக மாற்றும் என்று அடிக்கடி செபித்தார். இறைவனின் அழைப்பு பெற்று, 1835 ஆம் ஆண்டு, ஜூன் 13 ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்றார். அன்னை மரியே நீங்கள் என் தாய், எனது கற்பை காத்துக்கொள்ளும் என்று செபித்து தூயவராக வாழ்ந்தார். இறைவனின் அன்பு தீயாக அவரது இதயத்தில் எரிந்தது. இறைத் தூண்டுதலால் நூல்கள் பல எழுதினார். 1849 ஆம் ஆண்டு, ஜூலை 16 ஆம் நாள், கிளரீசியன் சபையைத் தோற்றுவித்தார். 1869 ஆம் ஆண்டு முதல் வத்திக்கான் சங்கத்தில் கலந்துகொண்டார். ஆன்மாக்களை மீட்க ஆர்வமாக உழைத்து, 1870 ஆம் ஆண்டு, அக்டோபர் 24 ஆம் நாள் இறந்தார். இவர் துணி வியாபாரிகளின் பாதுகாவலர்.