Namvazhvu
நவம்பர்  06  புனித லியோனார்ட்
Saturday, 05 Nov 2022 06:02 am
Namvazhvu

Namvazhvu

புனித லியோனார்ட் பிரான்ஸ் நாட்டில், அரசக் குடும்பத்தில் 469 ஆம் ஆண்டு பிறந்தார். முதலாம் குளோவிஸ் அரண்மனையில் பணியாற்றியபோது, தனது பதவியை பயன்படுத்தி, ஏராளமான நன்மைகள் செய்தார். புனித ரெமிஜியுஸ் ஆயரின் மறையுரையால் திருமுழுக்குப் பெற்றார். கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டபோது, அரண்மனை வாழ்வைத் துறந்து, செபம், தவம் செய்ய வனப்பகுதிக்கு சென்றார். அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்றுகூறி, ஏழைகளை அன்பு செய்து, இறையன்பின் சாட்சியானார். கடுமையான தவமுயற்சிகள் மேற்கொண்டு, தன்னை புனிதப்படுத்தினார். பாவத்தின் சிறையில் வாழ்ந்தோரை விடுதலை செய்தார். இறைமக்களின் உடல், உள்ளம், ஆன்மா வளர்ச்சிபெற அயராது உழைத்தார். 559 ஆம் ஆண்டு, அக்டோபர் 6 ஆம் நாள் இறந்தார். சிறைக்கைதிகள், பிரசவ வலியால் துடிப்பவர்கள் ஆகியோரின் பாதுகாவலர்.