புனித வில்லிபிரார்ட் நார்த்தம்பிரியாவில் 658 ஆம் ஆண்டு பிறந்தார். தனது ஆன்மாவையும், உடலையும் கறைபடாமல் பாதுகாத்து, கிறிஸ்துவுக்கு தன்னை அர்ப்பணித்தார். கிறிஸ்துவை இதயத்தில் சுமந்து, நற்செய்தி அறிவிக்க தனது 20 ஆம் வயதில், அயர்லாந்து சென்று புனித எக்பெர்ட் வழிகாட்டுதலில் நற்செய்தி அறிவித்தார். மக்களுக்கு இறைநம்பிக்கையை அமுதாய் ஊட்டினார். வேதகலாபனையில் கிறிஸ்தவ மக்களுக்கு தைரியம் பகர்ந்தார். செபத்தின் வழியாக கிறிஸ்துவில் ஒன்றாக இணைந்து உண்மைச் சீடராக வாழ்ந்தார். 695 ஆம் ஆண்டு, நவம்பர் 21 ஆம் நாள் ஆயராகத் திருப்பொழிவுப் பெற்றார். ராட்போர்ட் அரசன் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி, கிறிஸ்தவ மறையை விட்டு விலகுமாறு வற்புறுத்தி கொலை செய்தான். புனித வில்லிபிரார்ட் தன் உயிரை இழக்கவேண்டிய சூழலிலும் நற்செய்தியை அறிவித்து, 739 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் நாள் இறந்தார்.