புனித பெனிக்னஸ் அயர்லாந்து நாட்டில் பிறந்தார். புனித பேட்ரிக் என்பவரின் போதனையால் திருமுழுக்கு பெற்று, கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டார். பேட்ரிக்கின் நெருங்கிய நண்பரானார். அவர் சென்ற இடமெல்லாம் அவருடன் சென்று, இறையாட்சி பணி செய்தார். தனது இனிமையான குரலைப் பயன்படுத்தி திருப்பாடல்கள், பாடல்கள் பாடுவதிலும், செபங்கள் சொல்வதிலும் ஆர்வமுடன் செயல்பட்டார். மிகுந்த ஆர்வத்துடன் நற்செய்தியை தனதாக்கி அறிவித்தார். பெனிக்னஸின் மறையுரையைக் கேட்ட எண்ணற்றோர் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக்கொண்டனர். 405 ஆம் ஆண்டு, அயர்லாந்து மண்ணின் முதல் ஆயரானார். பேட்ரிக் ஆரம்பித்த ட்ருமெலிஸ் என்ற துறவு இல்லத்தின் தலைவராகச் செயல்பட்டார். கிறிஸ்துவுக்காக வாழ்ந்து, அவருக்காகப் பணி செய்து, 467 ஆம் ஆண்டு இறந்து, புனிதரானார்.