குப்பைத்தொட்டிகளில் போடப்படும் மறுபயனுக்குரிய மற்றும், மறுசுழற்சிக்குரிய பொருள்களைப் பொறுக்கி எடுத்துப் பயன்படுத்துகின்ற, கந்தல் தொழிலாளர்களுக்கு மனிதக் குடும்பம் அனைத்தும் நன்றி தெரிவிக்கவேண்டும். அதேநேரம், திரு அவை அவர்களோடு உடன்பயணிக்கிறது மற்றும், அவர்களை ஊக்கப்படுத்துகிறது என்று, அக்டோபர் 29 ஆம் தேதி, சனிக்கிழமையன்று இணையதளம் வழியாக நடைபெற்ற கந்தல் தொழிலாளர்களின் உலகளாவிய கூட்டமைப்பின் முதல் மாநாட்டில் பங்குபெற்றவர்களை வாழ்த்திப் பேசியபோது ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் கூறியுள்ளார்.