புனித பெரிய ஆல்பர்ட் பாவாரியாவில் பிரபு குடும்பத்தில் 1200 ஆம் ஆண்டு பிறந்தார். இறைபக்தியில் சிறந்து, மரியாவை தாயாக ஏற்றுக்கொண்டு, அன்பிலும், நீதியிலும், ஒழுக்கத்திலும் வளர்ந்தார். அன்னை மரியா காட்சி தந்து, சாமிநாதர் சபை துறவியாகும்படி கேட்டுக்கொண்டார். பல எதிர்ப்புகள் மத்தியில் 1223 ஆம் ஆண்டு, சாமிநாதர் சபையில் சேர்ந்து, இறையியலில் முனைவர் பட்டம் பெற்று, விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1254 ஆம் ஆண்டு, மாநிலத் தலைவரானார். இறைவார்த்தையின் அடிப்படையில் துறவிகளின் ஆன்மீக வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். “நீதியும், அன்புமே நிரந்தர அமைதிக்கு அடிப்படை” என்றார். 1260 ஆம் ஆண்டு ஆயரானார். மக்கள் இறையன்பிலும், சகோதரன்பிலும் வளர வழிகாட்டினார். அவனியில் அமைதியை ஏற்படுத்தி, இறைமக்களின் நலனுக்காக வாழ்ந்த ஆல்பர்ட், 1280 ஆம் ஆண்டு, நவம்பர் 15 ஆம் நாள் இறந்தார்.