புனித எலிசபெத் ஹங்கேரியில் 1207 ஆம் ஆண்டு பிறந்தார். துருக்கியா நாட்டு ஹெர்மான் அரசருக்கு 4 ஆம் வயதில் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. திருமண ஏற்பாடுகள் நடந்தபோது, ஹெர்மான் இறந்ததால் அவரது தம்பியை மணந்தார். கணவரின் துணையுடன் ஆடை, ஆபரணங்களை அகற்றி, மக்களுக்கு தேவையான பொன்னும், பொருளும் கொடுத்தார். “என் ஆண்டவர் இயேசு முள்முடி அணிந்தபோது, எனக்கு மட்டும் ஏன் நகைகள்?” என்றார். 1226 ஆம் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். “நான் இறந்த பிறகு, என்னிடமுள்ள சொத்துகளை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுங்கள். என்னை எளிய ஆடை அணிவித்து அடக்கம் செய்யுங்கள்” என்றார். கணவர் இறந்தபின், பிள்ளைகளுக்கும், ஏழைகளுக்கும் செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்தார். பிரான்சிஸ் அசிசியாரின் 3 ஆம் சபையில் சேர்ந்து, தவம் மேற்கொண்டு 1231 ஆம் ஆண்டு இறந்தார்.