புனித முதலாம் ஜெலாசியஸ் ஆப்பிரிக்காவில் பிறந்து, உரோமை குடிமகனாக வாழ்ந்தார். உரோமை ஆலயத்தில் தலைமை திருத்தொண்டராகப் பணியாற்றினார். திருத்தந்தையர்களுக்கு உதவியாக பணி செய்தார். 492 ஆம் ஆண்டு, திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தெய்வீகச் சக்தியும், அரசியல் சக்தியும், தூய்மையானவை மற்றும் சுதந்திரமானவை ஆகும். இறைவனது திரு அவையின் திருப்பீடம் அரசர்களின் அரியணை என்ற கொள்கையுடன் வாழ்ந்தார். சிலைவழிபாட்டுக்கு எதிராக குரல் கொடுத்தார். அன்னை மரியாவுக்கு தன்னை அர்ப்பணம் செய்தார். நற்கருணை மற்றும் இயேசுவின் திரு இரத்தம் இரண்டையும் சேர்த்து அருந்தும் பழக்கம் நடைமுறைக்கு கொண்டு வந்தார். கிறிஸ்துவின் பிரதிநிதியாக இறைபணி செய்து, 496 ஆம் ஆண்டு, நவம்பர் 21 ஆம் நாள் இறந்தார்.