புனித கொலும்பானுஸ் அயர்லாந்தில் 540 ஆம் ஆண்டு பிறந்தார். கொலும்பானுஸ் என்றால், “வெள்ளைப் புறா” என்பது பொருள். நற்பண்புகளில் சிறந்து, கிறிஸ்துவுக்கு வாழ்வை அர்ப்பணித்து, இறைவிருப்பத்திற்கு கீழ்ப்படிந்து, துறவு மேற்கொண்டார். இறைவனை போற்றிப் புகழ்வதில் ஆனந்தம் அடைந்தார். அரண்மனையில் வாழாமல், ஏழ்மையை விரும்பி குடிசையில் வாழ்ந்தார். திருப்பாடல் நூலிற்கு விளக்கம் எழுதினார். துறவு இல்லங்கள் நிறுவி, இடைவிடாமல் ஒப்புரவு வழங்கினார். சக துறவிகள் தவம் செய்யவும், துறவு இல்லத்தின் ஒழுங்குமுறைகள் பின்பற்றவும் வழிகாட்டினார். நியூஸ்திரியாவில் நற்செய்தி பணிவழி புதுமைகள் செய்து, நோயுற்றோரை நலமாக்கி, தவறுகளைக் கண்டித்த கொலும்பானுஸ் 615 ஆம் ஆண்டு, அக்டோபர் 16 ஆம் நாள் இறந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்.