புனித ஆன்ட்ரூ குங் லாக் வியட்நாமில் 1795 ஆம் ஆண்டு பிறந்தார். கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டு, திருமுழுக்கு பெற்றார். இத்தருணம் பேரரசன் மினங் மான்ங் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி, கொலை செய்தான். கிறிஸ்தவ மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டது. ஆன்ட்ரூ உலக செல்வத்தில் ஏழையானாலும், இறைசெல்வத்தில் தன்னிறைவு பெற்றார். 1823 ஆம் ஆண்டு குருவானார். நிலைவாழ்வுதரும் இறைவார்த்தையை வாழ்வாக்கி அறிவித்தபோது, மக்கள் மனம்மாறி கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டு, திருமுழுக்குப் பெற்றனர். இவரது நற்செயல்களால் பேரரசன் கோபம் கொண்டு, மூன்று முறை சிறையில் அடைத்து, கிறிஸ்துவை மறுதலிக்க துன்புறுத்தினான். ஆன்ரூட் கிறிஸ்துவுக்காக துன்பங்களை துணிவுடன் ஏற்றார். 1839 ஆம் ஆண்டு, டிசம்பர் 21 ஆம் நாள் தலைவெட்டி, கொலை செய்தனர். இவர் வீடுகளுக்குப் பாதுகாவலர்.