புனித மரிய கிராசிஃபிசா தி ரோசா இத்தாலியில் 1813 ஆம் ஆண்டு, நவம்பர் 6 ஆம் நாள் பிறந்தார். தனது 10 ஆம் வயதில் தாயை இழந்தபோது, விசிட்டேஷன் அருட்சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்தார். தந்தையிடம் துறவு மேற்கொள்ள விருப்பம் தெரிவித்து, அனுமதியும் ஆசியும் பெற்றார். 27 ஆம் வயதில் கேபிரியெல்லா போர்னாடி என்ற கைம் பெண்ணின் துணையுடன், கருணை சகோதரிகள் சபையை நிறுவினார். சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கும், பிளேக் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அன்பு பணிகள் வழி உதவினார். 1840 இல் சபைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துறவிகள் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி பெற, அன்னை மரியாவிடம் இறைவேண்டல் செய்தார். 1850 இல் சபைக்கு திருத்தந்தையின் அனுமதி கிடைத்தது. நற்கருணையின் முன் நீண்டநேரம் செபித்து, தனது தேவைகளை எடுத்துரைத்து ஆசி பெற்றார். 1855 ஆம் ஆண்டு, டிசம்பர் 15 ஆம் நாள் இறந்தார்.