Namvazhvu
ஜனவரி - 13 புனித ஹிலாரி
Thursday, 12 Jan 2023 11:53 am
Namvazhvu

Namvazhvu

புனி ஹிலாரி பிரான்ஸ் நாட்டில் 250 ஆம் ஆண்டு, வேற்று கடவுளை வணங்கிய பெற்றோருக்கு பிறந்தார். கிறிஸ்துவுக்கு தன்னை அர்ப்பணம் செய்தார். அரசருக்கு எதிராக பேசியதால் நாடு கடத்தப்பட்டார். திருப்பாடல்கள், இறைவாக்கினர்களின் நூல்கள் வாசித்தபோது, இறைவனின் அன்பும், இரக்கமும், வல்லமையும் உணர்ந்தார். தனது 30 ஆம் வயதில் திருமுழுக்கு பெற்று, உலக இன்பங்கள் மீது பற்றற்றவராக வாழ்ந்தார். தனது உடமைகளை விற்று, ஏழைகளுக்கு கொடுத்தார். ஆயரை சந்தித்து, குருவாக அருள்பொழிவு பெற்றார். கிறிஸ்தவர்களை அரசர் தீசியுஸ் தீக்கிரையாக்கினார். ஹிலாரியையும் கைது செய்து, கழுத்தில் இரும்பு வளையம், கை கால்களில் சங்கிலியும் பிணைத்து, சிறையில் அடைத்தான். காவல் தூதரின் உதவியுடன் தப்பி அரசர் இறக்கும்வரை தலைமறைவானார். பின், ஆயராக அருள்பொழிவு பெற்று, இறையாட்சி பணி செய்தார். ஏராளமான நூல்களை எழுதி, வரலாற்றில் இடம் பெற்ற ஹிலாரி 260 ஆம் ஆண்டு, இறந்து புனிதரானார்.